மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியின் பிரமுகர் ரவி விஷ்வகர்மா.. இவர் அரசியலுடன் சேர்த்து கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 26) தன்னுடைய நண்பருடன் அருகிலுள்ள பகுதிக்குக் காரில் சென்றுள்ளார்.. அப்போது அவரது காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அவரின் நண்பரை மட்டும் காரிலிருந்து விரட்டியுள்ளனர்.
பின்பு, ரவியைக் காரைவிட்டு இறங்கிவிடாமல் அவரையும், அவரின் காரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர், துப்பாக்கியால் ரவியைச் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுக்க, மறுநாள் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது..
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியின் காவல் கண்காணிப்பாளர், 15 பேர் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளார்.. போலீசாரின் தேடுதல் வேட்டையில், குற்றப்பின்னணி கொண்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Very horrify video coming from MP Hoshangabad, VHP gau Raksha' ravi vishvakarma is murdered and reason of murder mutual rivalry #hoshangabad pic.twitter.com/UVIQRfIag6
— Saalim_mughal/سالم 🇮🇳 🇵🇸 (@mirza_j3) June 27, 2020