Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகன் படிப்புக்காக வாங்கிய கடன்… திருப்பிக்கேட்டு மிரட்டல்… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

மகனின் மருத்துவப் படிப்புக்காக கடன் வாங்கிய கூலித்தொழிலாளி ஒருவர், திருப்பிக் கட்ட முடியாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நெ.3 குமாரபாளையத்தில் வசித்துவருபவர் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி கலைமணி.. இவரது மகன் கவியரசு சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்துவருகின்றார்.. மகனைப் படிக்க வைப்பதற்கு கலைமணி மல்லூர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில், அதிக வட்டிக்கு கடனாகப் பணம் வாங்கியுள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையில்லாத காரணத்தால், அவரால் கடனை திருப்பி கட்ட முடியவில்லை.. இந்த சூழலில் கடன்கொடுத்தவர்கள் கடனைத் திருப்பிக்கேட்டு மிரட்டியதாகக் சொல்லப்படுகிறது. இதனால், மனமுடைந்து விரக்தியடைந்த கலைமணி விஷம் குடித்துவிட்டு, பின் கடன் பிரச்னையால்தான் இந்த முடிவை எடுத்தேன் எனத் தெரிவித்து, வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தகவலறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு மல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |