Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினி இரங்கல் …!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த  பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இருவரின் மரணத்திற்கு காவல்துறை தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் இந்தியளவில் பூதகரமாகியுள்ளது.

இந்த மரணத்திற்கு பல்வேறு பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் ரஜினிகாந்து ஜெயராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பெண்ணிக்ஸ் மறைவுக்கு தொலைபேசியில் ஜெயராஜ்  குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |