நான்கு சவப்பெட்டியில் வைத்து கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது
ஸ்பெயினிலிருந்து ருமேனியா நோக்கி கார் ஒன்று 4 சவப்பெட்டிகளுடன் சென்றுகொண்டிருந்தது அந்த கார் டௌப்ஸ் நகரின் A36 சாலையில் சென்ற சமயம் மிஸ்ஸரி சலின்ஸ் அருகே சுங்கவரி துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சவப்பெட்டியில் என்ன இருக்கின்றது என கேட்டபோது அதில் ஒன்றும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சவப்பெட்டிகளை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது அதில் 60 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து ருமேனியா நாட்டின் குடியுரிமையை கொண்ட அந்த வாகனத்தின் ஓட்டுநர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது வழிப்பறி கொள்ளை வழக்குகள் இருந்தது தெரியவந்தது. மேலும் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு எடுத்து செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.