சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு வருகின்ற போது இதை தெரிவித்து நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
Categories