மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க புதிய டெலிவரி ரோபோட் ஸ்டார்ஷிப் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மில்டன் கினெஸில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வெளியில் மக்கள் தொடர்புகளை குறைக்கும் விதமாக ஸ்டார்ஷிப் டெக்னாலஜி தங்கள் நிறுவனத்தின் மூலம் தீர்ப்பளித்துள்ளனர். அவர்களது நிறுவனத்தில் ரோபோக்களை தயார்செய்து கொடுத்துள்ளனர். 6 சக்கரங்கள் கொண்ட இந்த ரோபோக்கள் கடைகளிலிருந்து உணவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்கின்றது.
இதனை பயன்படுத்துபவர்கள் தங்களது கைப்பேசி மூலமாக ரோபோட்டை வழிநடத்தினால் போதுமானது வீட்டிற்கு ரோபோட் வந்ததும் கைப்பேசிக்கு மெசேஜ் அனுப்பும் இதுபோன்ற தொழில்நுட்பம் மூலமாக மனிதர்கள் வெளியில் வராமல் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஸ்டார்ஷிப் நிறுவனம் கூறியுள்ளது.