Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முயலை வேட்டையாடிய 6 பேர்… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

முயல் வேட்டையில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளத்திவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் முயல் வேட்டை செய்து வருவதாக ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் 6 பேர் கொண்ட கும்பலை கண்டனர்.

காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கொத்தமங்கலம் சிதம்பர விடுதியை சேர்ந்த வீரமணி, திருமுருகன், பரமேஸ்வரன், புகழேந்தி, உத்தம நாதன் என்பது தெரியவந்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்த பேட்டரி லைட், வலை போன்றவை கைப்பற்றி திருவரங்குளம் வனச்சரகர் சபீர் அகமதிடம்  ஒப்படைத்தனர்.

Categories

Tech |