Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவரால் ஏற்பட்ட நிலை… என் சகோதரர விடுங்க… நடுரோட்டில் குழந்தைகளுடன் பெண் தர்ணா… ஸ்டேஷன் முன் பரபரப்பு..!!

சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது

உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனை அறிந்த அபிராமி தனது 2 குழந்தைகளுடன் காவல் நிலையம் வந்து நடுரோட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சகோதரரான ஜானகிராமனை உடனடியாக விடுவிக்க வேண்டுமென அப்போது கோஷங்களை எழுப்பினார். பின்னர் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அபிராமியை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |