அரசின் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி திருமணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கீசுலால் ரதி என்பவருக்கு தனது மகனின் திருமணத்தை 50 விருந்தினர்களுடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால் திருமண விழாவில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதோடு அங்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் தாத்தா கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார்.
தடையை மீறி திருமணத்தில் கூடியவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருமணத்தினால் குடும்பத்தார் செய்த அலட்சிய காரியத்தால் உணவு, பரிசோதனை செய்தல், தனிமை வார்டு அமைத்தல் என அரசுக்கு பல செலவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கணக்கிட்டு 6,26,600 ரூபாய் அபராதம் விதித்து அதை மூன்று தினங்களுக்குள் செலுத்துமாறு குடும்பத்தினருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது குடும்பத்தினர் செய்த தவறை நினைத்து புலம்பி வருகின்றனர்.