ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் கோஸ் தீவிற்கு இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கிரேக்கத் தீவான கோஸ் தீவிற்கு திங்கள்கிழமை முதல் ஜெர்மன் நாட்டு மருத்துவர்கள் இலவசமாக சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கோஸ் தீவுக்கு செல்ல 170 மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த முயற்சியை எடுத்திருப்பதாக கிரேக்க சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.
ஜூன் ஒன்றாம் தேதி கிரீஸ் தனது விமான நிலையங்களை பயணிகள் போக்குவரத்திற்காக அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கு திட்டமிடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவர்கள் குழுவுடன் ஜெர்மனியில் இருந்து சிறப்பு விமானம் கோஸ் தீவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவை சார்ந்தே நாட்டின் பொருளாதாரம் கால் பாதி இருப்பதால் விமானப் பயணத்திற்கான அனுமதியை ஐரோப்பா மீண்டும் வழங்கியிருக்கும் நிலையில் அரசாங்கம் கிரேக்கத்தில் விடுமுறையை செலவிட இருக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. கிரேக்கத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200க்கும் குறைவாகவே உள்ளது.