Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் இறந்த கணவன்… உடலை அடக்கம் செய்தபின்… 2 பெண் பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு..!!

கொரோனாவால் கணவன் உயிர் இழந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-ராம்பிரபாவதி தம்பதியினர். பிரபாகர் ரயில்வேயில் வேலை பார்த்து வரும் நிலையில் ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பிரபாகரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊருக்கு சடலம் கொண்டுவரப்பட்டு நேற்று மதியவேளையில் அடக்கம் செய்யப்பட்டது. பிரபாகரன் கொரோனாவால் உயிரிழந்ததால் அவரது இரண்டு மகள்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டுமென அவர்கள் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர். உடன் தன் அம்மாவையும் வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனால் கணவனை இழந்த துயரத்தில் இருந்த ராம்பிரபாவதி மருத்துவமனை செல்ல மறுத்ததோடு தொடர்ந்து கணவனை நினைத்து அழுது கொண்டே இருந்தார். இதனால் தாயை சமாதானப் படுத்த முடியாத மகள்கள் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராம்பிரபாவதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |