விண்வெளியில் இயங்கும் கழிப்பறை அமைத்துக் கொடுத்தாள் 26 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது
விண்வெளி பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் பல நாட்டை சேர்ந்தவர்கள் விண்வெளியில் மையம் அமைத்து பல வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆராய்ச்சியில் ஈடுபடும் விண்வெளி வீரர்களுக்கு தங்குமிடம், கழிப்பறை போன்ற அத்தியாவசிய வசதிகளை விண்வெளியில் அமைத்துக் கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது,
புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால் வீரர்களின் உடையில் இணைந்த டைப்பர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையமான நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றது.
இந்நிலையில் நுண்ணிய ஈர்ப்பு விசையிலும் சந்திரனின் ஈர்ப்பு விசையிலும் இயங்கும் கழிவறையை வடிவமைத்து கொடுப்பவர்களுக்கு 26 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. அதோடு உலக நாடுகள் அனைத்தும் இந்த சவாலில் பங்கேற்கலாம் என்றும் திட்டத்தின் மாதிரி வரும் ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதிக்குள் எங்கள் கைக்கு கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.