Categories
உலக செய்திகள்

பெரிய பிரச்சனை வரப்போகுது… குறைவா எடை போடாதீங்க… போருக்கு தயாரா இருங்க… எச்சரிக்கும் சீன அதிகாரி..!!

இந்தியாவை குறைவாக எடை போட வேண்டாம் பெரும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என சீன பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கடந்த சில தினங்களாக இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இம்மாதம் 15ஆம் தேதி இரண்டு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மரணமடைந்து சீனாவை சேர்ந்த 45 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவின் முன்னாள் விமானப்படை மேஜர் ஜெனரல் மற்றும் சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான குயாங் லியாங் சீன அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “இப்போது இந்திய சீன பிரச்சனை நிச்சயமாக சரியாகாது, இது மிகப்பெரிய அளவில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சீனா அதற்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியாவை எப்போதும் நாம் குறைவாக எடை போட்டு விடக்கூடாது. நம் எல்லைகளை நாம்தான் கவனமாக பாதுகாக்க வேண்டும். எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிக அளவில் பலப்படுத்தும் வகையில் நமது செயல்கள் அமைந்திட வேண்டும். நம் நாட்டுப் படைகளை எல்லையில் முதல் ஆளாக குவிக்க வேண்டும். நாம் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முதல் ஆளாக இந்தியாவை நாம் தாக்குவதற்கு தயாராக வேண்டும். சின்ன சின்ன போர் மூலமாக இந்தியாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வழிவகுக்க வேண்டும். இரண்டுமே அணுஆயுதம் ரீதியாக பலம் கொண்ட நாடுகள்தான் எல்லைப்பகுதியில் ஆயுதங்களை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளை தொடங்கவேண்டும். இந்த பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் மோசமான நிலையை அடையும். எல்லையில் ரோந்து பணிகளை நாம் அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் அத்துமீறலை எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நிகழ்த்தலாம்.

இரு நாட்டு இடையே இருக்கும் பிரச்சனை முழுமையாக தீர்வதற்கு இப்போது வாய்ப்பு இல்லை. இந்தியா எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களை செய்து வருகின்றது. சீனாவின் கேம்ப்களை அனுமதி இன்றி அகற்றுகின்றது. ஒருபோதும் சீனா இச்செயல்களை அனுமதிக்கக்கூடாது. இனியும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து வந்தால் சீனா உடனடியாக பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எல்லையில் இந்தியாவின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பு இனி இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |