Categories
மாநில செய்திகள்

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல.. மருத்துவ நிபுணர்கள் குழு..!!

கொரோனவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தளர்வுகளுடன் கூடிய 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொற்று அதிகமுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை நிறைவு பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர்கள் குழு, பொது போக்குவரத்து கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது. குழு ஆலோசனையை ஏற்று சோதனைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்துள்ளது.

பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே நோய்களை கண்டறிய முடியும் என தெரிவித்தனர். மேலும் ஊரடங்கி நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரைக்கவில்லை என தெரிவித்தனர். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |