தெலுங்கானாவில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் அம்மாபாளையம் பகுதிகளுக்குள் குரங்கு ஒன்று புகுந்து அங்கே உள்ள தோட்டத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழ, சத்தம் கேட்டு வந்த தோட்டத்தின் உரிமையாளர் குரங்கை கம்பால் கடுமையாகத் தாக்கியதோடு, அதனுடைய கழுத்தில் கயிறை கட்டி தொங்கவிட்டு மிகவும் கொடூரமாக அந்த குரங்கை கொலை செய்து உள்ளார்.
பின் இறந்த குரங்கை அவர் தோட்டத்தில் வளர்க்கும் நாய்களுக்கு உணவாக வீசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்கள் இதற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்