Categories
மாநில செய்திகள்

போலீசாரை காலால் எட்டி உதைத்த முன்னாள் அதிமுக எம்.பி… 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு..!!

சேலம் அருகே போலீசாரை தாக்கிய அதிமுக எம்பி. அர்ஜுனன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரை தாக்கியதாக அர்ஜுனன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, போலீசாரை அர்ஜுனன் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சேலம் மாநகரம் அழகாபுரம் எம்ஜிரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருமுறை அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். இவர் நேற்று இரவு ஓமலூரில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு, பின்னர் சேலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவற்றின் காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது தாம் ஒரு முன்னாள் நாடாளுமனற்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அதிமுகவை சேர்ந்தவன்.

என்னையே நிறுத்தி சோதனை செய்கிறீர்களா? என காரசாரமாக போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் திருப்பூர் உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர், ஆவணங்கள் காண்பித்தால் மட்டுமே காரை எடுத்துச்செல்ல அனுமதி என கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு வரை சென்றுள்ளது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் ரமேஷ்-ஐ அதிமுக நிர்வாகி தாக்கியுள்ளார். காலால் எட்டி உதைத்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகள் கொண்டு பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில், காவலரை கெட்ட வார்த்தையால் பேசியதற்காக 294b என்ற பிரிவிலும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அவரை தாக்கியதற்காக 353 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |