பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். மருத்துவர் பிரதீப் கவுர் ட்விட் செய்துள்ளார்.
ஐ.சி.எம்.ஆர்_ரின் பிரதிநிதியும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவரான பிரதீப் கவுர் தற்போது போது ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட அளவில் அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலையை பொறுத்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று அந்த ட்விட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல மருத்துவ நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை அடிப்படையில் பார்த்தோமென்றால் மாவட்ட அளவில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன ?
அங்கு எவ்வளவு பாதிப்பு உள்ளது ? என பரிசீலித்து தமிழக அரசு தன்னுடைய முடிவினை எடுக்கும் என்ற ஒரு விஷயத்தை தற்போது டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் தொடர்பான தன்னுடைய முடிவினை மேற்கொள்ளும் என்று தற்போது தெரிகின்றது.
TN Govt will take a decision on restrictions or lockdown based on the district level situation. Expert group recommended that analysis of various epidemiological indicators and field situation might be considered while making the decision
— Prabhdeep Kaur (@kprabhdeep) June 29, 2020