மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது ஜூன் 30 வரை ஐந்தாவது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது ஜூன் 30-ஆம் தேதி அதாவது நாளை நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 15ஆம் தேதி வரை ஊராடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரில் இதுவரை 1092 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 660 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 432 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிப்புக் குறைவாக காணப்படும் மணிப்பூர் மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பாதிப்பு அதிகம் காணப்படும் இடங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.