Categories
தேசிய செய்திகள்

BREAKING : டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை..!!

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது..  டிக் டாக், யூசி பிரௌசர், ஹலோ, சேரிட் உள்ளிட்ட அதிகமாக பயன்படுத்தப்படும் 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.. இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே மிகுந்த மோதல் போக்கு இருக்கும் சூழலில், பதட்டம் இருக்கும் சூழலில் மத்திய அரசின் முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது.

நாளை பேச்சுவார்த்தை இருக்கக் கூடிய நிலையில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என கருதி மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

Categories

Tech |