Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து தான் வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்னையில் இருந்து வந்து சென்றவர்கள் மூலம் கொரோனா தோற்று அதிகம் பரவி வருவதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1791 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. அதில், 779 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 993 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் இதுவரை கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதை நிலையில், இன்றும் காஞ்சிபுரத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Categories

Tech |