தமிழகம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் ஒன்று என கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
கிருஷ்ணகிரி 5, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 10, ராணிப்பேட்டையில் 18, சிவகங்கை 6, தென்காசி 2, தஞ்சாவூர் 19, தேனியில் 4, திருவாரூர் 2, தூத்துக்குடி 4, நெல்லையில் 5, திருப்பூர் 26 இடங்கள் என மொத்தம்29 மாவட்டங்களில் 703 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர், அரியலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை.
இந்த மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பரிந்துரைக்கவில்லை என்றும், நோய் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை குறைத்தாலே போதுமானது என தெரிவித்திருந்தது. அதன்படி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளை தற்போது வெளியிட்டுள்ளது.