இளம்பெண்ணிடம் அத்துமீறிய மகனை பெற்றோரே காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனில் ஜாக் என்ற இளைஞன் இளம்பெண் ஒருவர் மறுப்பு தெரிவித்தும் அவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு அந்த இளைஞனின் கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்றை அவனது பெற்றோர் பார்த்துள்ளனர். குறிப்பிட்ட இளம்பெண்ணிடம் அத்துமீறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதோடு அந்த பெண் மிகவும் அப்செட்டாக இருப்பதை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளான் அந்த இளைஞன் ஜாக். இதனை பார்த்த அவனது பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடந்த உண்மையை ஒப்புக்கொள்ள வைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று நீதிபதிகள் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அந்த இளைஞனுக்கு விதித்தனர். காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து விசாரித்த பொழுது அவர், “நடந்தது உண்மைதான் தனது வாழ்க்கையே சூனியாமாகிப்போனது போல் உணர்கின்றேன். ஆண்கள் மீது இருந்த நம்பிக்கை முற்றிலுமாக போய்விட்டது” எனக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எந்த ஒரு புகாரும் அளிக்காத நிலையில் தவறு செய்த இளைஞனின் பெற்றோர் தங்களது மகனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.