Categories
உலக செய்திகள்

50 மில்லியன் பவுண்டுகள் செலவில்… மகளின் திருமணத்தை நடத்திய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்…!!

50 மில்லியன் பவுண்ட் செலவு செய்து மகளின் திருமணத்தை நடத்திய செல்வந்தர் தற்போது திவால் ஆகியுள்ளார்

தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் சகோதரர் பிரமோத் மிட்டலுக்கு 130 மில்லியன் பவுண்ட்கள் கடன் ஏற்பட்டு அவர் திவாலானதாக தெரியவந்துள்ளது. போஸ்னியா நாட்டில் மிகப்பெரிய குற்றத்தில் தொடர்பு இருந்ததாக கூறி அவர் அதில் தொடர்ந்தே பணத்தை இழந்து திவாலானதாக கூறப்படுகின்றது. பிரமோத் மிட்டலின் சகோதரரான லக்ஷ்மி மிட்டல் பிரிட்டனின் பத்தொன்பதாவது செல்வந்தர். ஆனால் அவர் தனது சகோதரர் பிரமோத் மிட்டலை ஏற்பட்டிருக்கும் சிக்கலில் இருந்து காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தந்தையின் ஸ்டில் சாம்ராஜ்யம் தொடர்பாக சகோதரர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். சகோதரருக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என லட்சுமி மிட்டல் கருதுவதாக கூறப்படுகின்றது. 2013ஆம் வருடம் பார்சிலோனாவில் 50 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து தனது மகளின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். அந்த திருமண நிகழ்வில் 500 விருந்தினர்கள் பங்கேற்றனர்.

அந்த திருமணத்தில் 132 பவுண்ட் எடையுடைய திருமண கேக் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது. மிட்டல் போஸ்னியாவின் நகரில் இருக்கும் நிலக்கரி தொடர்புடைய தொழிற்சாலையில் 2003ஆம் ஆண்டிலிருந்து பங்குதாரராக இருந்துள்ளார். இதனிடையே அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி நடந்ததாக எழுந்த சந்தேகம், பொருளாதார ரீதியான குற்றம் போன்றவற்றில் பிரமோத் மீட்டல் சென்ற வருடம் ஜூலை மாதம் போஸ்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |