சாத்தான்குளம் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகின்றன.ஜெயராஜை போலீஸ் அதிகாரி விசாரணைக்கு அழைத்து செல்வது போன்ற CCTV வீடியோ வெளியாகியது. ஆனால் போலீஸ் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடையின் முன்பு உருண்டு புரண்டதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின், இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது.
#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா? #ArrestKillersOfJayarajAndBennix என ட்விட் செய்துள்ளார்.