இந்தியா – சீனா இடையே நடந்த மோதலை தொடர்ந்து மத்திய அரசு சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது
இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் மேற்கொள்ளப்பட்டது. சீனாவின் இந்த அத்துமீறலுக்கு பிறகு மத்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக சீனாவில் இறக்குமதி செய்யும் பொருட்களை குறைத்துவிட்டு, இந்தியாவில் உள்ள பொருட்களை பயன்படுத்துமாறும் மத்திய அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
டிக் டாக், யூசி பிரௌசர், ஹலோ, சேரிட் உள்ளிட்ட அதிகமாக பயன்படுத்தப்படும் 59 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சமூக ஊடகமான ட்விட்டரில் டிக் டாக் என்ற ஹாஷ்டக்கில் பல்வேறு வீடியோக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு வீடியோவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஒரு கதவை தட்டி திறக்கின்றனர். அப்போது பிரதமர் மோடி வருவதைப் பார்த்து பாகிஸ்தான் பிரதமர் பயந்து ஓடுவது போலும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் தான் கண்ணு தெரியாத நபர் போலும் நடிப்பது போன்ற ஒரு குறும்படமும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Yours_Purvi/status/1277629150421868545