Categories
தேசிய செய்திகள்

ஆட்டம் காட்டிய சீனா… அடக்கிய இந்தியா… மத்திய அரசு அதிரடி..!!

டிக் டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால் சீனா விழிபிதுங்கியுள்ளது..

கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லடாக் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர்.. அதேபோல சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவியது.

இச்சம்பவத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இரண்டு நாட்டு படைகளும் வாபஸ் பெறுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.. இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.. அதாவது, இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும்.. சீன உணவுகளை இந்தியர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அவர் முன்வைத்தார்..

அதேபோல டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சீன செயலிகளை அனைவரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.. இந்த சூழலில் தான் பிரதமர் மோடியின் மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.. ஆம், டிக் டாக், யூசி பிரௌசர்,  ஹலோ, சேரிட் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.. இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே மிகுந்த மோதல் போக்கு இருக்கும் சூழலில் மத்திய அரசின் முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் குறிப்பாக டிக் டாக்  செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். தற்போது டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட்டிருப்பதால் சீனாவுக்கு இது பெருத்த அடியாக இருக்கும்.. இதனால் சீனா விழிபிதுங்கியுள்ளது.. அதேசமயம் டிக் டாக் பயனர்கள் சற்று வருத்தப்பட்டாலும் நாட்டுக்காக இதனை நாம் வரவேற்போம்..!!

Categories

Tech |