வங்கதேசம் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கதேசத்தின் தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது, படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என்று தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.. பலியானவர்களில் 6 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அடங்குவர் என்றும், சிலர் பத்திரமாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை நாங்கள் 23 பேரை சடலங்களாக மீட்டுள்ளோம்.. மேலும் காணாமல் போனவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது..
விரிவான உள்நாட்டு நீர்வழிகளைக் கொண்டுள்ள ஒரு தாழ்வான நாடான வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படகு விபத்துக்களில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.