இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேச இருக்கின்றார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மாலை 4 மணியளவில் நாட்டு மக்களிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து உரையற்ற இருக்கின்றார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பிறப்பிக்கபட்டுள்ள ஊரடங்கால் மீண்டும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன ? சமூக இடைவெளி, முக கவசம் அணிவது மற்றும் ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவது என்று பல்வேறு விஷயங்களை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையை சுட்டிக்காட்ட இருக்கின்றார்.
Prime Minister @narendramodi will address the nation at 4 PM tomorrow.
— PMO India (@PMOIndia) June 29, 2020
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த உரை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், இந்த ஊரடங்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் ஒவ்வொரு மாநில அரசும் செய்ய வேண்டியவை என்ன ? கொரோனவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை சம்பந்தமாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.