பொதுமுடக்க தளர்வுகள் 2.O என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொது முடக்கம் 2 தளர்வுகள் என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திறப்பதற்கான தடை ஜூலை 31-ஆம் தேதி வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள், கோச்சிங் சென்டர் உள்ளிட்டவற்றிற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர பன்னாட்டு விமானங்கள், மெட்ரோ ரயில்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், வழிபாட்டு மத ஒன்று கூடல்கள் இவை அனைத்திற்கும் ஜூலை 31ம் தேதி வரை தடை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள உள்நாட்டு போக்குவரத்து சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும்
இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை அமலில் இருக்கும். மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 15ம் தேதி முதல் இயங்கும். வந்தே பாரத் திட்டத்தில் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் குறைந்த அளவில் இயக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடைகள் தொடரும் . கட்டுப்பாடு பகுதிகள் தவிர பிற பகுதிகள் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.