சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும் சிசிடிவி காட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் ஒரு நொடி கூட வீணாக கூடாது என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.