ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி கேள்விகளை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வில்லை என்பதற்காக அதிகாரிகள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போல நீதித்துறை நடுவரை மரியாதை குறைவாக பேசியதாக காவலர் பிரபாகரனையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 3 காவல் அதிகாரிகளும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நெல்லை டிஐஜி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞ்சர் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறை நடுவரை மரியாதை குறைவாக பேசிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த 24 நான்கு காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். பின்னர் நீதிபதிகள் கூறும் போது, நீதிபதிகள் நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரும. அவர்கள் மூவரும் தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
அரசு தரப்பில், காவலர்கள் அதிகமான மன அழுத்ததில் இருந்ததன் காரணமாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பது தெரியுமா ? தெரிந்தும் நீங்கள் ஏன் இவ்வாறு பிரச்சனையை பெரிது படுத்தும் விதமாக நடத்து கொள்கிறீர்கள் ? என்று தெரிவித்தார் தொடர்ச்சியாக மூவர் தரப்பிலும் இந்த தனித்தனியே வழக்கறிஞரை நியமித்து 4 வாரங்களில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.