ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் போலீசுக்கு ஆதரவாக காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழகத்தையே ஒருபுறம் கொரோனா பாதிப்பு சோகத்தில் ஆழ்த்த, மற்றொருபுறம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசானது காவல்துறையினர் மன அழுத்தத்தில் இதுபோன்ற தவறுகளை செய்து விட்டதாக காவல்துறையினருக்கு ஆதரவாக பதிலளித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றமோ, ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல அனுமதிகளை பெற்று சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன் தடயங்கள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. நீதியை நிலைநாட்ட வேண்டுமெனில் ஒரு நொடி கூட வீணாக கூடாது உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.