Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3803 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் மொத்தம் பாதிப்புகளின் எண்ணிக்கை 3,656 ஆக இருந்தது.

மேலும், நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,245 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,345ல் இருந்து 1,492 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் இதுவரை 66 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூலை 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதிவரை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Categories

Tech |