Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய விடிய தாக்கி உள்ளனர்… மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்!!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார்.

கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த வாரம், மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் நேரடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

அவர், சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், “உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது டா” என மாஜிஸ்திரேட்டை மிரட்டியதாக போலீஸ் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும், இன்று காலை, இருவரின் மரணம் குறித்து விளக்கம் அளிக்க சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அப்போது, காவல்துறை தரப்பில் சில விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும், அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்கும் வரை சிபிசிஐடி இதுகுறித்து விசாரிப்பர் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நேரடி விசாரணை நடத்தி வந்த மாவட்ட மாஜிஸ்திரேட் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தந்தை, மகன் தாக்கப்பட்டது அம்பலம்:

அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ போலீஸ் விடிய விடிய தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் கூறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் லத்தியை கேட்டபோது ஒரு காவலர் தப்பியோட்டம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே அழியும் வகையில் செட்டிங் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமானது.

சாட்டியளித்த பெண் காவலருக்கு மிரட்டல்:

மேலும், தந்தை மகன் தாக்கப்பட்டது குறித்து சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த அச்சத்துடனே பெண் காவலர் சாட்சியம் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெண் காவலர் சாட்சியத்தில் என்ன கூறுகிறார் என்பதை சிலர் கேட்க முயன்றதாக நீதிபதி புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் நடந்தது பற்றி கூறினால் தனக்கு மிரட்டல் வரும் என்று பெண்காவலர் பதற்றமாக இருந்ததாக நீதிபதி பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |