சென்னை மாநகராட்சியில் இன்று 2,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. சென்னையில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 33,441 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்றும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னை மாநகரில் 2,500ஐ தாண்டியள்ளது. தமிழகம் முழுவதும் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் ஜூலை 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 5ம் தேதிவரை முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் வரும் 5ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மேலும் முழுஊரடங்கு பிறகு என்ன தளர்வுகளுக்கு அனுமதி என்ற அறிவிப்பையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.