குடும்ப பிரச்சனையினால் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இத்தாலியில் தந்தை ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகளை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தந்தை மற்றும் பிள்ளைகள் 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிள்ளைகளை கொலை செய்து விட்டு மனைவிக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் உனது பிள்ளைகளை ஒருபோதும் உன்னால் பார்க்க முடியாது.
குடும்பத்தை நீ சீரழித்துவிட்டாய் என குறிப்பிட்டுள்ளார். கணவர் அனுப்பிய குறுந்தகவலை பார்த்த மனைவி படுக்கை அறைக்கு சென்று பிள்ளைகளை பார்த்துள்ளார். அங்கு சடலமாக பிள்ளைகளுக்கு கிடந்துள்ளார். 12 வயது ஆன இரட்டையர்களை கொலை செய்துவிட்டு தந்தை மரியோ பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். ஒரு மகனின் கழுத்தை நெரித்து மற்றொருவனை தலையணையால் மூச்சைத் திணற அடித்துக் கொன்று இருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இரண்டு வருடங்களாக குடும்ப பிரச்சனையினால் கணவன்-மனைவி இருவரும் சண்டையிட்டு வந்தநிலையில் ஒருமுறைகூட மனைவி வன்முறையை தூண்டியது இல்லை. இரண்டு பிள்ளைகளில் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு மற்ற தகவல்கள் வெளிவரும் என அறியப்படுகின்றது.