Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோயில் அருகே மதுபானக் கடை… உடனே மூடுங்க… பொதுமக்கள் கோரிக்கை..!!

கோயில், நூற்பாலை அருகே உள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில் கோயில், நூற்பாலை இயங்கிவருகிறது. இப்பகுதியில் முன்பே மதுபான கடை இயங்கி வந்துள்ளது. மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மதுபான கடை செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததால்  மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் டாஸ்மாக் கடையை உடைத்து ...

இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். கோவில் நூற்பாலை செயல்படுவதால் பெண்கள் அதிக அளவு வந்து செல்லக்கூடிய இந்த பகுதியில் மதுபான கடை செயல்படக்கூடாது. மதுபான கடையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்றவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |