சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் நீதித்துறை நடுவர் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு, மரணம் நிகழ்ந்தது தொடர்பாக நீதித்துறை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையாக இருக்கக்கூடிய மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு விசாரணை எடுத்ததற்கு பிறகு இதில் நடந்திருக்கக் கூடிய விஷயங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
அறிக்கை தாக்கல்:
நீதித்துறை நடுவர் தன்னுடைய ஆய்வுக்குப் பிறகு நீதிமன்றத்தில் தனது அறிக்கையை கொடுத்துள்ளார். அதில் சாத்தான்குளம் வழக்கின் நேரடியான சாட்சியாக காவலர் ஒருவர் இருந்திருக்கிறார். அந்தக் காவலரின் சாட்சியம் இந்த வழக்கை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து இருக்கிறது. காவலரின் சாட்சியத்தில் அவர் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களில் மிக முக்கியமானது.
CCTV பதிவு அழிப்பு:
சாத்தன்குளம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை உயர்நீதிமன்ற கிளையில் உத்தரவுப்படி பதிவிறக்கம் செய்து அதை ஆய்வுக்குட்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் அந்த பதிவில் ( ஒரே நாள் ) ஒவ்வொரு நாளும் பதிவாகும் காட்சியே இருந்துள்ளது. சம்பவம் நடந்த 19ஆம் தேதி நடந்த எந்தவிதமான காணொளி காட்சிகளும் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பதிவாகிய காட்சிகள் அழிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அவருடைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மோசமான அணுகுமுறை:
முக்கியமான நேரடி சாட்சியங்களாக இருக்கக் கூடியவர்களை விசாரிக்கச் சென்றபோது, நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு விசாரணை நடைபெற்றதன் அடிப்படையில் நேரடியாக ஒரு மாஜிஸ்ட்ரேட் வந்திருக்கிறார் என்றும் அங்கு இருக்கக்கூடிய காவல் அதிகாரிகளின் அணுகுமுறை என்பது மிக மோசமாக இருந்துள்ளது.
நேரடி சாட்சியாக காவலர்:
நேரடி சாட்சியமாக ஒரு காவலர் ஒருவர் இருக்கிறார். அவருடைய சாட்சியத்தை பதிவு செய்யும் போது அவர் அச்சப்பட்ட சூழ்நிலை இருந்தது.வெளியில் இழுக்கக்கூடிய காவலர்கள் சாட்சியத்தையும் மிரட்ட கூடிய சூழ்நிலை இருந்தது. ஒரு காவலராக அந்த சாட்சி இருந்தாலும் கூட, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடக்கக்கூடிய ஒரு விசாரணை என்றாலும் கூட, சாட்சி சொல்வதற்கு மிகவும் அச்சத்தோடும், பயத்தோடும் இருந்தார்.தான் சொல்லும் உண்மைகள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டாம் என்று அந்த சாட்சி மிகுந்த எச்சரிக்கையோடு கேட்குக்கொண்டது.
அச்சுறுத்தல்:
காவல் நிலையத்தில் சாட்சியத்தை பதிவு செய்யும் போது காவல் நிலையத்தில் வலது பக்கத்தில் இருக்கக்கூடிய வேப்ப மரத்தின் கீழ் கூட்டமாக நின்று கொண்டு இருந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள் கொடுத்த எந்த அறிவுறுத்தலையும் கேட்காமல் சாட்சியத்தை அச்சுறுத்தும் வகையிலேயே செயல்பட்டார்கள். இதில் நேரடி சாட்சியாக ஒரு பெண் காவலர் தான் இருக்கிறார். அந்த சாட்சியம் ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னாடி சாட்சி சொல்லவும் பயந்துள்ளார். அவருக்கு நம்பிக்கை கொடுத்து நீதிமன்ற பாதுகாப்பு இருக்கிறது என்றெல்லாம் சொன்ன பிறகும் கூட அவரால் அச்சத்தில் இருந்து வெளியே வர முடியாத ஒரு சூழல் இருந்தது. சாட்சியம் மிரட்டல் வரும் என்ற பயத்தோடு இருந்தார்.
அடித்ததை பார்த்துள்ளார்:
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் காவலர் அந்த இடத்தில் இருக்கிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சரமாரியாக தாக்கிய நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்த சாட்சியமாக அந்த பெண் காவலர் சொல்லும் போது, ஒரு அசாதாரண சூழல்கள் ஏற்பட்டது. கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும், லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கரை படிந்துள்ளதாகவும், அதனை உடனடியாக அழிக்க நேரிடும் என்றும் பெண் காவலர் சாட்சியம் ( வாக்குமூலம் ) சொல்லி இருக்கின்றார்.
ரத்த கறை உள்ளது:
ஜெயராஜையும், பென்னிக்ஸ்ஷையும் விடிய விடிய லத்தியால் அடித்ததை இவர் பார்த்து இருக்கிறார். மேலும் லத்தி, டேபிள் இரண்டு இடத்திலும் இருக்கும் ரத்த கரையை அழிக்க நேரிடும் என்று சொல்லி இருக்கிறார். சாட்சியம் அளித்த வாக்குமூலத்தை எழுத்து பூர்வமாக பிரிண்ட் எடுத்த பேப்பரில் கையெழுத்து போடுவதற்கு சாட்சியம் தயங்கியது. ஏனென்றால் வெளியே அப்படியான ஒரு சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சாட்ச்சியத்திடம் உரிய பாதுகாப்பு கொடுக்கும்படி தெரிவித்து, கட்டாயப்படுத்திய பிறகு தான் கையெழுத்திட்டார் என்றும் நீதித்துறை நடுவர் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.
தரக்குறைவாக பேசிய அதிகாரி:
அதே போல மகாராஜன் என்ற காவலர் முதுகுக்குப் பின்னால் இருந்து உன்னால என்ன செய்ய முடியும் ? என்று மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி காதில் விழும்படி பேசினார். சாட்சி சொல்லுபவருக்கு பயத்தை ஏற்படுத்தும் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார்கள். பெண் காவலர் உண்மையைப் பேசுவதற்கு முடியாத மோசமான ஒரு சூழலை அங்கிருந்தத ஏடிஎஸ்பி தொடங்கி டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் ஏற்படுத்தினார் என்பதை நீதித்துறை நடுவர் பதிவு செய்கிறார்.
சுவர் ஏறி குதித்து ஓடிய காவலர்:
அதே போல காவலர் மகாராஜாவிடம் லத்தி எங்கே ? என்று கேட்ட போது அது என்னிடம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பின்னர் ஊர்ல இருக்குன்னு சொல்லியும், பிறகு போலீஸ் குடியிருப்பில் இருக்கிறது என்றெல்லாம் மாறி மாறி சொல்லிட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தாக கூறிய நீதித்துறை நடுவர் மற்றொரு காவலர் சுவர் எகிறி குதித்து தப்பி ஓடி விட்டார் என்பதையும் பதிவு செய்திருக்கின்றார்.அங்கிருந்த காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருப்பதை வலியுறுத்தியதோடு விசாரணை, சாட்சிய வாக்குமூலம் எல்லாமே வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பித்து தெரிவித்துள்ளார்.