கொரோனா ஊரடங்கு தளர்வு 2.0, இந்தியா சீன எல்லையில், சீன செயலிகளை தடை போன்ற சூழலில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசினார். unlockdown 2.0 தொடங்கிவிட்டது. கொரோனவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவது சகஜம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.
சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறப்போரின் வீதம் குறைவாக உள்ளது. பொதுமுடக்கத்தை பொதுமக்கள் பல இடங்களில் சரியாக பின்பற்றப்பட வில்லை. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாடு கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது.
இப்போது செய்யக்கூடிய சிறிய தவறுகள் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம். அரசு விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு மத்திய அரசு உதவிகளை செய்கிறது. ஒரு இந்தியர் கூட பசியுடன் இரவு தூங்கச் செல்லக்கூடாது. நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாட கூடாது. பொதுமக்கள் பலர் மாஸ்க் அணியாமல் பொறுப்பற்ற முறையில் இருக்கின்றனர். பொதுமுடக்கம் முதல் கட்டத்தில் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்ததை பார்க்க முடிந்தது. தளர்வு அளித்தாலும் முன்பைவிட தற்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் பேசி வருகின்றார்.