Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரூ.90,000,00,00,000 ஒதுக்கீடு… ”நவம்பர் வரை இலவசம்” மோடி அதிரடி அறிவிப்பு …!!

நவம்பர் வரை இலவச பொருட்கள் வழங்கப்படும் என்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.

விதிமீறலுக்கு ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை பார்க்கிறோம். பிரதமர் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதி தான். பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கரீப்  கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகின்றது.கொரோனா கால கட்டத்தால் கரீப்  கல்யாண் திட்டத்தின் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும்.

கோதுமை அல்லது அரிசி 5 கிலோ அளவில் இலவசமாக வழங்கப்படும். ஒரு கிலோ கடலைப் பருப்பும் இலவசமாக வழங்கப்படும். மூன்று மாதத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி பண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 80 கோடி மக்களை இலவச ரேஷன் பொருட்கள் சென்றடையும் மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க 90 ஆயிரம் கோடி செலவிடப்படும்.பொருளாதார சூழலை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்

Categories

Tech |