மேஷ ராசி அன்பர்களே …! மற்றவர் செயல்களில் தடைகள் உட்படாத படி நடந்து கொள்வது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் தான் இருக்கம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே எதையும் செய்யுங்கள். எதிலும் கண்டிப்பாக நிதானம் வேண்டும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். ஒவ்வாத உணவுகளை தயவு செய்து எடுத்து கொண்ட வேண்டாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனையை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி கொடுப்பதாக இருக்கும். ஓரளவு முன்னேற்றத்தைக் கொடுக்கும் நிலை இருந்தாலும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கொஞ்சம் கவனம் வேண்டும்.
காதலர்கள் இன்று பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.