பெண்களை ஏமாற்றிய வழக்கில் காசின் தந்தை தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் வழக்கின் தடயங்களை அளித்ததாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பது போல் நடித்து, தனிமையில் இருக்கும் வீடியோக்களை எடுத்து, அதனை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீசார் காசியை ஏற்கனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தியதோடு இந்த வழக்கில் தொடர்புடைய காசியில் நண்பர் ஒருவரையும் கைது செய்திருந்த நிலையில் இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் காசி தொடர்பான ஆவணங்களை காசியின் தந்தை தங்க பாண்டி என்பவர் அழித்ததாக கூறி சிபிசிஐடி போலீசார் அவரை விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் முறையாக வராத நிலையில் தற்போது தங்கபாண்டியனிடம் நாகர்கோவிலில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.