கடக ராசி அன்பர்களே …! சில புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்பியவர்கள் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய கூடும். இன்று சராசரி அளவில் பணவரவு இருக்கும். எதிர்பார்த்த சுபசெய்தி வர தாமதம் ஆகலாம். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். மனம் ஓரளவு உற்சாகமாகவே காணப்படும்.
சில நேரங்களில் தேவை இல்லாத விஷ்யத்தை போட்டு மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு ஓரளவு இருக்கும். புதிய நபரிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும்.
புதிதாக காதலி வயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறமும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.