சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது.
இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. பிரேத பரிசோதனையில் இடம்பெற்ற தகவல்கள் என்னவென்றால், மூன்று முக்கியமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரது உடல்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாலை 7.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை பிரேத பரிசோதனை நடைபெற்றது.
இதற்க்கு முன்னதாக மதியமே இருவரின் உடல்களில் உள்ள காயங்கள் அனைத்தும் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் எத்தனை காயங்கள் இருந்தது ? அது அடிபட்டதால் ஏற்பட்ட காயங்களா ? அல்லது எப்படி ஏற்பட்டது ? காயங்களினால் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ? என்பது குறித்து அனைத்தும் கணக்கிடப்பட்டது. அப்படி கணக்கெடுக்கப்பட்டதில் பென்னிக்ஸ் உடலில் சுமார் 20க்கும் மேற்பட்ட காயங்கள் ரத்தக் கட்டிகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் அவரது தந்தை ஜெயராஜின் உடல்களில் 15க்கும் மேற்பட்ட காயங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அதேபோல அவரது பிறப்புறுப்பில் காயம் இருக்கிறது. அவரது தந்தையின் பிறப்புறுப்பிலும் அந்த மாதிரியான காயம் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த விஷயங்கள் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக இருக்கிறது என்றும் மருத்துவ துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.