Categories
தேசிய செய்திகள்

குங்குமம் வைக்க மாட்டேன்… வளையல் அணிய மாட்டேன்… அடம்பிடித்த மனைவி… நீதிபதி சொன்ன தீர்ப்பு..!!

வளையல் போடாதது, குங்குமம் வைக்காதது திருமணத்தில் ஈடுபாடு இல்லாததை குறிக்கின்றது என கூறி விவாகரத்து வழங்கியுள்ளனர்

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2012ம் வருடம் திருமணம் செத்துக்கொண்டனர். திருமணம் முடிந்து சில தினங்களிலேயே கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் தனது மனைவிக்கு தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறி விவாகரத்து வழங்க கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதனை அடுத்து மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் “இந்துமத திருமண பழக்கவழக்கங்களான குங்குமம் வைப்பது, வளையல் போடுவது போன்றவை மிகவும் முக்கியமானவை. ஆனால் அதனை அப்பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததை உணர்த்துகின்றது. அதோடு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கணவன் மீது அந்த பெண் சுமத்தியுள்ளார் இது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றது” எனக் கூறி தம்பதியினருக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்தனர்.

Categories

Tech |