Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை..!!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 2ம் கட்டமாக நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினார். தற்போது, அதன் விசாரணை முடிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கோவில்பட்டி மாவட்ட மாஜிஸ்திரேட் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். அது குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்தது அம்பலமானது. மேலும், தந்தை மகன் தாக்கப்பட்டது குறித்து சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த அச்சத்துடனே பெண் காவலர் சாட்சியம் அளித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில், இன்றே விசாரணையை தொடங்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, ஆவணங்களை பெற்ற சிபிசிஐடி தங்களது விசாரணையை தொடங்கியுள்ளார். இதனிடையே, இன்று மாலை சாத்தக்குளம் காவல்நிலையத்தில் மீண்டும் விசாரணையை தொடங்கினார். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |