புதுச்சேரியில் ஜூலை 3ம் தேதி முதல் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைகள், தொழில் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கினை 2.0 தளர்வு நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மத, கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை.
நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.