59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்த நிலையில் தற்போது செயலி முழுவதும் உபயோகிக்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக், ஹலோ, யூசி ப்ரவுசர், youcom, ஷேர்இட் உட்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. முதற்கட்டமாக இந்த செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல ஒரு சம்பவம் அரங்கேறிய போது, பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. மாறாக அவர்கள் அனைவரும் டிக்டாக் செயலியை உபயோகித்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
ஆனால் தற்போது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு செயலிகள் குறித்த விபரங்களை அளித்து, அதனுடைய இன்டர்நெட் சேவைகளை (internet access) முற்றிலுமாக துண்டித்து உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இந்த செயலிகளை யாரும் உபயோகப் படுத்த முடியாது. தற்போது டிக் டாக் மட்டும் உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நீ வரக்கூடிய காலங்களில் தடை செய்யப்பட்ட 59 செயலிகளையும் உபயோகிக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.