சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.