சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது.
இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உறையூர் காவல் நிலைய காவலர் இளங்கோவனை ஆயுதப்படைக்கு காவல் ஆணையர் வரதராஜு மாற்றியுள்ளார். காவல் ஆணையர் இன்று பணி ஓய்வு பெரும் நிலையில் காவலர் ஒருவரை இடமாற்றம் செய்துள்ளார்.